வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்


3.1 உடல் வளர்ச்சியின் பருவங்கள்:

ஒரு பெண்ணில், முதல் இருபது ஆண்டுகால வாழ்க்கையை நாங்கு பருவங்களாகப் பிரிக்கலாம்.

1.  பிள்ளை பருவம் ( 6 வயது வரை )
2. பின் பிள்ளை பருவம் ( 6 - 9 வயது வரை )
3. வளரிளம் முன் பருவம் ( 9 - 14 வயது வரை )
4. வளரிளம் பின் பருவம் (15 - 19 வயது வரை )


3.11  பிள்ளை பருவம் ( 6 வயது வரை )


பெண் குழந்தை பிறந்தது முதல் 6 வயது வரையிலான் காலக் கட்டத்தை பிள்ளைப் பருவம் என்று அழைப்பது வழக்கம்.

3.12 பின் பிள்ளை பருவம் ( 6 - 9 வயது வரை )


ஒரு பெண் 6 வயதை கடந்து, 9 வயது வரை இந்த பின் பிள்ளைப் பருவ வயதில் பிள்ளைகளின் பெரியவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்விக்கவும் அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறவும் விரும்புகின்றனர்.

இந்த பின் பிள்ளை பருவத்தில், தங்களுக்கென்று நண்பர்கள் குழுவை அமைத்துக் கொண்டு அவர்களுடன் தங்களை எப்போதும் இணைத்துக் கொள்வதையே விரும்புகின்றனர்.

ஒத்த இயல்புடைய நண்பர் குழுவை அமைத்தும் கொள்வதில் இப்பருவமே தொடக்கமாக அமைகிறதுஆண்களும், பெண்களும் தனித்தனியே நண்பர்கள் குழுவை அமைத்துக் கொள்ளவே விருப்புகின்றனர்.

இந்த பின் பிள்ளைப் பருவத்தில், புதிய அனுபவங்களைத் தேடுகின்றார்கள்அதில் தாங்களாகவே முயற்ச்சிகளில் ஈடுபடுவார்கள்.


3.31  வளரிளம் முன் பருவம் ( 9 - 14 வயது வரை )


உடலின் ஏற்படும் மாற்றங்களால் பொதுவான குழப்பம் வருகிறது.

தன் வயதினரோரடு சேர்ந்து பழகக் கற்றுக் கொள்கிறார்கள்.

ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் ஆகிய இருவரும் பயன் மிக்க வினாக்கள் எழுப்புகின்றனர்எதிலும் அக்கறைச் செலுத்துகின்றனர்ஆழ்ந்து சிந்திக்கின்றனர்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கட்டளை பிறப்பித்தால், பிடிவாதமாக அவர்களை எரிச்சல் படுத்தும் காரியங்களை செய்கின்றனர்எடுத்துக் காட்டாக எப்போதும் விளையாட்டில் கவனம், ஒழுங்கற்று ஆடை அணிதல், பிடிவாதமான பழக்கவழக்கங்கள்ம, உரத்து இசைத்தல், கொச்சை தொடர்பான செயல்களையும், வீட்டு வேலைகளையும் புறக்கணித்தல்.

சுற்றியுள்ள சமூகத்திலிருந்து ஆண் அல்லது பெண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி கற்றுக் கொள்கிறார்கள்.


3.1.4.  வளரிளம் பின் பருவம் (15 - 19 வயது வரை )


இந்த வளரிளம் பின் பருவப் பெண்கள் ஒத்த வயதினரிடையே இருபாலரிடத்தும் பழகுவதில் அதிகமான முதிர்ச்சி பெறுகிறார்கள். 

இந்த வளரிளம் பின் பருவப் பெண்கள், சமுதாயப் பொறுப்புகளை விரும்பி ஏற்றுக் கொண்டு செயல்பட எண்ணுகிறார்கள்.

இந்த வளரிளம் பின் பருவப் பெண்கள், பெற்றோர்கள், பெரியோர்கள் ஆகியவர்களிடம் இருந்து நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொள்கிறார்கள்.

இந்த வளரிளம் பின் பருவப் பெண்கள், வாழ்க்கையின் உயர்நிலைகளையும், நீதி நெறிகளையும் தங்கள் வாழ்வின் வழிகாட்டியாக கொள்ளுதல் போன்ற குறிக்கோள்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இந்த வளரிளம் பின் பருவப் பெண்கள், உடலில் உண்டாகும் மாற்றங்களைக் கண்டு அதை அறிய அக்கறை கொள்ளுதல் மற்றும் ஐயத்தைப் போக்கி கொள்ள விழைகிறார்கள்.

இந்த வளரிளம் பின் பருவப் பெண்கள், எண்ணங்களில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுகின்றனமேலும், இந்த வளரிளம் பின் பருவப் பெண்கள், சிறிய செயலுக்குக் கூடப் பெரிதாக் வருந்துவார்கள்; கோபமாகப் பேசுவார்கள்.

இந்த வளரிளம் பின் பருவப் பெண்களிடம், மன உறுத்தல், அமைதியின்மை, கோபம் போன்ற குணங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

இப்பருவத்தில் தங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்வதில் மிகவும் அக்கறை காட்டுகின்றனர்பெற்றோரிடம் இதுவரை காட்டி வந்த குழந்தை தனமான பிணைப்பிலிருந்து விடுபட்டுத் தாங்களே அறிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள்.


3.2.  குடும்பப் பாரம்பரியம்:

வளரிளம் பருவத்தில் இருபாலருகும் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாகும்ஆண்களை விட பெண்கள் உயரமாக இருப்பார்கள்பருவ வயதினை எப்போது அடைகிறார்கள் என்பதைப் பொறுத்தும் குடும்ப பாரம்பரியமாக பல தனிப்பட்ட வேறுபாடுகள் ஏற்படுகின்றன.


3.3 மென்மையான உடல் வளர்ச்சி:

ஆணுக்கு பலமான் தசை வளர்ச்சியும், பெண்ணுகு மென்மையான் உடல் வளர்ச்சியும் ஏற்படுகின்றதுபெண்களுக்கு பூப்பெய்தியவுடன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

3.4  உயரமும் வளர்ச்சியும்:ஆண்களுக்கு வளர்ச்சி சற்று தாமதமாக ஆரம்பித்தாலும் உயரமும், வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.

3.5  இந்த வளரிளம் பருவத்தில்:

இந்த வளரிளம் பருவத்தில் அவரவர் உயரத்திற்கேற்ப அவர் தம் உடலின் எடையும் கூடும்இது அவர்கள் உட்கொள்ளும் உணவைப் பொறுத்ததுஉடலின் எடையும் உயரமும் குறிப்பிட்ட விகிதத்தில் வளர்ச்சி பெறும்.

3.6 இன உறுப்பு வளர்ச்சி:

வளரிளம் பருவத்தின் போது ஆண், பெண் இருபாலருகும் இன உறுப்புகள் முழுமையாக வளர்ச்சி பெறுகின்றனஆனால், சில ஆண்டுகளுக்கும் பிறகுதான் அவை செயல்படக்கூடிய பக்குவம் பெறுகின்றன.

3.7  மார்பக வளர்ச்சி:

மார்பக வளர்ச்சி சிறுமிக்கு 8 வயது முதல் 13 வயதிற்குள் தொடங்குகிறதுஇந்த வளர்ச்சி 13 வயது முதல் 18 வயதிற்குள் முடிந்து விடுகிறது.

3.8  இடை வளர்ச்சி:

பெண்களுக்கு குழந்தைப் பேற்றின் போது, இடை எலும்பு விரிவடைவதற்க்கு ஏற்றார்போல் குழந்தையிலேயே இடை அமைப்பு தோன்றி விடுகின்றது.