வெற்றிச் சூட்சுமம் :



காவிரி ஆறு மலைப்பாங்கான கர்நாடக வனப் பகுதியில் உற்பத்தி ஆகிறதுஆடுதாண்டு காவிரியாக இருந்த காவிரி, அகண்ட காவிரியாக திருச்சி மாவட்டத்தில் வந்து கல்லணையின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை செழிப்படைய செய்து, பூம்புகார் என்ற காவிரிப் பூம்பட்டிண்த்தில் வங்கககடலில் கலக்குகிறது.

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி ஆன காவிரி ஆறு நூற்றுக்கணக்கான மைல் பயணம் செய்வதற்க்கு காரணம், முறையாக காவிரி ஆற்றுக்கு இரண்டு கரைகள் உள்ளதுதான்.

அந்த காவிரி ஆற்றில், இரண்டு கரையில், ஒரு கரை உடைந்ததால், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்க்கு அந்த தண்ணீர் பயன் உள்ளதாக அமையுமா? காவிரி ஆற்றின் தண்ணீர் கடலை வந்து சேருமா?

வளரிளம் பெண்ணே! சற்று சிந்தி உடைந்த கரை வெள்ளக்காடாக ஒரு இடத்தையோ ஒரு ஊரையோ மாற்றி விடும்.

இதே போல், உன் வாழ்க்கையை ஒரு வரைமுறைக்குள் நல்லது கெட்டது எது என்று உணர்ந்து, அத்தகைய வரைமுறைக்குள் உன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், வாழ்க்கையில் பலப்பல அரிய சாதனைகள் படைக்கலாம்.

இதுவே வெற்றியாளர்களின் "வெற்றி சூட்சமம்".  இதனை நீங்களும் இன்று முதல் பயன்படுத்தி வாழ்க்கையில் பலப்பல வெற்றிகள் அடைய வாழ்த்துக்கள்.



மாணவ, மாணவிகளுக்கு பத்து அம்ச உறுதிமொழி:


1.  நான் எனது வாழ்க்கையில் நல்லதொரு இலட்சியத்தை மேற்கொள்வேன்.

2.  நன்றாக உழைத்து படித்து, என் வாழ்க்கை இலட்சியத்தை அடைய முற்படுவேன்.

3.  நான் எனது விடுமுறை நாட்களில் எழுத படிக்கத் தெரியாத ஐந்து பேருக்கு எழுத படிக்கச் சொல்லிக் கொடுப்பேன்.

4.  என் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்தபட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு, அதைப் பாதுகாத்து வளர்த்து மரமாக்குவேன்.

5.  மது, சூதாடுதல் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகித் துயருறும் ஐந்து பேரையாவது அதிலிருந்து மீட்டு, நல்வழிப்படுத்த நான் முயல்வேன்.

6.  துயருறும் ஐந்து பேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, அவர்களின் துயரைத் துடைப்பேன்.

7.  நான் சாதியின் பெயரிலோ, மதத்தின் பெயரிலோ, இனத்தின் பெயரிலோ, மொழியின் பெயரிலோ எந்தவிதப் பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்து கொள்வேன்.

8. நான் வாழ்க்கையை நேர்மையாக நடந்து கொண்டு மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருக்க முயல்வேன்.

9. நான்,என் தாய், என் தாய் நாடு இரண்டையும் நேசித்துப் பெண் குலத்திற்க்குரிய மரியாதையும், கண்ணியத்தையும் அளிப்பேன்.

10. நான், நாட்டின் அறிவு தீபத்தை ஏற்றி அணையாத தீபமாகச் சுடர்விடச் செய்வேன்.


                                                                                                                            - . பி ஜே. அப்துல் கலாம்
                                                                                                                         முன்னாள் குடியரசுத் தலைவர்.


2.0 வளரிளம் பருவம்:

வாழ்க்கையில் முக்கியப் பருவம்:

2.1  பிட்டியூட்டரி சுரப்பி:

வளரிளம் பருவத்தின் மாற்றங்கள் ஒரு பெண்ணின் உடலில், நாளமில்லா சுரப்பியான, பிட்டியூட்டரி சுரப்பியால் சுரக்கும் திரவங்களின் மூலமாகத் தூண்டப்படுகின்றன.

வளரிளம் பெண்ணின் பாலியல் உணர்வுகளைக் கட்டுபடுத்தவும் இந்த பிட்டியூட்டரி திரவங்கள் துணை புரிகின்றன.


2.2  இரண்டுங்கெட்டான் வயது:

நமது கிராமங்களில், இந்த வளரிளம் வயதினரை நமது முன்னோர்கள் இரண்டுங்கெட்டான் வயதினர் என்று அழைப்பார்கள்அது ஏன் ? இந்த வளரிளம் பருவத்தினர் மிக்க உணர்ச்சிவயப்படும் தன்மை உடையவர்கள், மேலும் வளரிளம் பருவத்தினர் திடீர் உணர்ச்சிகட்கு ஆட்படக்கூடியவர்கள்.

2.3  செயல் இரு துருவங்கள்:

இந்த வளரிளம் பருவத்தினர், இரண்டு துருவத்தில் ஏதாவது ஒரு துருவத்தில், அதாவது வடதுருவம் அல்லது தெந்துருவம் என்ற நிலையில் இருப்பார்கள்.

உதாரணமாக, வளரிளம் பருவத்தினர் குழுவில் சேர்ந்திருப்பார்கள் அல்லது தனியாக இருப்பார்கள்.

இதே போல், இந்த வளரிளம் பருவத்தினரிடம் பலவற்றைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும் அல்லது எதிலும் ஈடுபாடு கொள்ளாத தன்மை இருக்கும்.

மேலும், இந்த வளரிளம் பருவத்தினர், மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள் அல்லது அதற்கு எதிர்மாறாக தன்னைத் தானே சந்தேகிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

2.4  உணர்வுகளை அறிதல்:

மனித வாழ்வில் குறிப்பாக ஒரு பெண்ணின் வாழ்வில், உடல் மற்றும் மன வளர்ச்சியின் பெரும் மாற்றங்கள் அனைத்தும் இந்த வளரிளம் பருவத்தில் நிகழ்ந்து முடிந்து விடுகின்றன.

ஒரு பெண்ணின் உடலில் உள்ள உணர்வுகள் கொப்பளித்து வெளிவரும் காலமும் இந்த வளரிளம் பருவம்தான்ஆகவே இந்த வளரிளம் பருவத்தில் ஒரு பெண் உணர்வுகளை தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்அதன் முதல் படிதான், "தன் உணர்வுகளை தான் தெளிவாக அறிதல்".

2.5  வாழ்க்கையில் முக்கிய பருவம்:

வளரிளம் பருவம்,ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய்ப் பருவம். அந்த வளரிளம் பருவத்தில் ஒரு பெண் தன்னுடைய முழு வாழ்க்கைக்குத் தேவையான் ஆக்கப்பூர்வமான செயல்களைத் திட்டமிட்டு, பலமான  அடித்தளத்தை அமைத்துக் கொள்ளும் பருவம்.

இந்த பருவத்தில் ஒரு பெண்ணுக்குத் தேவையான விஷயங்கள் என்று பல இருக்கின்றனதனக்குத் தேவையான் விஷயங்கள் என்ன என்று இனம் கண்டு கொண்டு வளரிளம் பருவ பெண் அவற்றை அறிய முற்பட வேண்டும்.

இந்த பருவத்தில் ஒரு பெண்ணுக்குத் தேவையான, தேவையற்ற விசயங்கள் என்று பல இருக்கின்றனதனக்குத தேவையான விஷயங்கள் என்ன என்றும், தனக்குத் தேவையில்லத விஷயங்கள் என்ன என்றும் தெரிந்து கொண்டு அவற்றை நன்றாக அலசி ஆராந்து அவற்றை தெளிவாக கண்டறிய வேண்டும்.

பிறகு வளரிளம் பருவப்பெண் சுய சிந்தனையை மற்றும் தெளிவான சிந்தனையை, தொலைநோக்குப் பார்வையோடு வளர்த்துக் கொண்டு, தனக்குத தேவையான விஷயங்கள் மட்டும், தன்னை நெருங்கும் வண்ணமும், தேவையற்ற பல விஷயங்கள் தன்னை நெருங்காத வண்ணமும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வளரிளம் பருவப் பெண்ணே! இத்தகைய சுய சிந்தனை வழி பாதுகாப்புப் போர்வை, காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, வளரிளம் பருவத்தின் கட்டாயமும் கூட.


2.6  வளரிளம் பருவத்தில் செய்ய வேண்டிய செயல்கள்:

இந்த வளரிளம் பருவத்தில் ஒரு பெண் ஆக்கவழியில் வாழ்க்கையை  அமைத்துக் கொள்ள செய்ய வேண்டிய செயல்கள்:

1.  ஏட்டுக் கல்வி மற்றும் வாழ்க்கைக் கல்வியில் கவனம் இருத்தல்.

2.  உடலை மற்றும் மனதை ஆரோக்கியமாகப் பராமரித்து, சுறுசுறுப்பாக இருத்தல்.

3.  நேரத்தை முறையாகக் கையாளுதல்.

4.  தன்னைப் பற்றி சிந்தித்து தன்னுடைய திறமைகளைப் புரிந்து கொண்டு, தனித்துவம் வளர்த்துக் கொள்ளுதல்.

5.  வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயித்தல்.

6.  தன்னையும், மற்றவர்களையும் மதித்தல், குறிப்பாக பெற்றோர் மற்றும் பெரியவர்களை மதித்தல்.

7.  நல்ல புத்தகங்களை படித்து, நல்ல ஆரோக்கிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுதல்.

8.  நல்ல செய்திகளை, பலப்பல தினசரிகளில் மற்றும் வார, மாத பத்திரிக்கைகளில் இருந்து படித்து தெரிந்து கொண்டு அறிவை விசாலப்படுத்திக் கொள்ளுதல்.

9.  நல்ல ஆரோக்கியமான நட்பை தேடிக்கொல்ளுதல்.

10. தொலைபேசி அல்லது கைபேசியைத் தொலைத் தொடர்பு சாதனமாக ஆக்கப்பூர்வமான எண்ணம் மற்றும் செயல்களுக்குப்
பயன்படுத்துதல்.

11.  உள்நோக்கு சிந்தனைக்காக நேரம் ஒதுக்கி, இதய இசையைக் கவனித்து உள்ளொளி பெருக்குதல்.

12.  உணவு, உழைப்பு, உறக்கத்திற்க்கு முக்கியத்துவம் அளித்து, உன்னத வாழ்க்கைக்கு அடிகோலுதல்.

13.  இண்டர்நெட்டில் நல்ல விஷயகளைத் தேடிக் கண்டுபிடித்து, ஆக்கபூர்வமான நண்பர்கள் வட்டத்தில் இருந்து தினம், தினம் நல்ல செய்திகளைப் பெற்று நல்ல  சிந்தனையை மேலும் வளர்த்துக் கொள்வது.

14.  நல்ல ஆரோக்கிய உணவைஉணவு முறை அறிந்து மற்றும் உணவு குணம் அறிந்து குறித்த வேளையில் குறித்த உணவை சாப்பிட்டு, உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல் மற்றும் மன ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ளுதல்.

15.  நல்ல ஒரு உடற்பயிற்ச்சியை தேர்ந்து எடுத்து, தினமும் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை உடலில் உள்ள அழுக்கை வியர்வை துளியாக வரும் வரை செய்து, உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல்.

16. மனப் பயிற்ச்சியாக ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்ற கருத்துக்கு ஏற்ப, ஏட்டுக் கல்வி தவிர, வாழ்க்கை கல்விக்கு என்று தினம் 10 முதல் 15 நிமிட நேரம் ஒதுக்கி நல்ல அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு நூல்களைப் படிக்கவும்.

17. இரவில் சீக்கிரம் படுத்து, நன்றாக உறங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து, ஒரு நாளில் காலை முதல் இரவு வரை புத்துணர்ச்சியுடன் மிக சுறுசுறுப்பாக இருப்பது.


வளரிளம் பருவத்தில் செய்யக் கூடாத செயல்கள்:

இந்த வளரிளம் பருவத்தில் ஒரு பெண்ணுகுத் தேவையான கீழ்கண்ட எட்டு செயல்கள் :

1.  பொழுதுபோக்கு என்ற போர்வையில் தொலைக்காட்சி முன் பெரும்பான்மை நேரத்தைச் செலவிடுதல்.

2.  எதிர்பாலினரை ஈர்ப்பதற்காக பொருத்தமில்லாத நடை மற்றும் உடைகளை விருப்புதல்.

3.  காதல் வயப்படுதல்.

4.  எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களைக் குறை கூறுதல்.

5.  சுய பச்சாதாபம்.

6.  சோம்பேறித்தனம்.

7.  இரவு கண்விழித்து இருந்துவிட்டு, காலை வேளையில் தூங்கி, அரிய அதிகாலை நேரத்தை ஆக்க வழியில் செலவழிக்காமல் கோட்டை விடுவது.

8.  இதய இசையை ரசிக்காமல், ரேடியோ இசை, குறுந்தட்டு இசை என்று வெளி இசையில் ஈர்க்கப்பட்டு, ஒரு நாளில் அதிகமான நேரம் வீணாக செலவு செய்தல்.


2.8  வயது மனித மன வளர்ச்சி:

வாழ்க்கையில் பின்னாளில், ஒரு பெண் அடைய இருக்கும் பல வெற்றிக்குக் களம் அமைத்துக் கொடுக்க வேண்டிய பருவம் இந்த 1-18 வயது காலகட்டம் ஆகும்.

ஆகவேதான், இந்த வளரிளம் பருவம், ஒரு பெண்ணின் வாழ்வில் மிக மிக முக்கியம் வாய்ந்த பருவமாகும்.


2.9  வளரிளம் பருவக் காலத்தில் தவிர்க்க வேண்டிய குணங்கள் மற்றும் பண்புகள்:

இந்த வளரிளம் பருவக் காலத்தில் ஒரு பெண், தவிர்க்க வேண்டிய குணங்கள் கீழ்கண்ட பத்து.

1. கோபம்
2. பொய் சொல்லுதல்
3. சோம்பல்
4. முயற்சியின்மை
5. ஆர்வமின்மை
6. மதிப்பின்மை
7. கவனம் சிதறுதல்
8. மற்றவர்களின் கவனம் ஈர்த்தல்.
9. இனக் கவர்ச்சி
10. பாட்டு / கேளிக்கைகளில் அதிக ஆர்வம்.


மனித வாழ்வில் மரங்கள்:

பிறந்தோம் தொட்டில் மரத்தின் உபயம்
நடந்தோம் நடைவண்டி மரத்தின் உபயம்
எழுதினோம் பலகை, பென்சில், காகிதம் மரத்தின் உபயம்
மணந்தோம் மாலை, சந்தனம் மரத்தின் உபயம்.
புணர்ந்தோம் கட்டில் என்பது மரத்தின் உபயம்
துயின்றோம் தலையணைப் பஞ்சு மரத்தின் உபயம்
நடந்தோம் பாதுகை ரப்பர் மரத்தின் உபயம்
பயணித்தோம் டயர், பலகை மரத்தின் உபயம்
வயதானோம் ஓய்வெடுக்கும் நிழல் மரத்தின் உபயம்
எல்லாம் முடிந்து கடைசியில் கூடவே வருகின்ற சவப்பெட்டியும், பாடையும் மரத்தின் உபயம்
சுடலை விறகும் கூட மரத்தின் உபயமே !

மரந்தான் மரந்தான் மனித வாழ்வெல்லாம் மரந்தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மரங்களையே மறந்தான்.

மரங்களைப் போல பிறருக்கும், பிற உயிர்களின் நலனுக்கும் தன்னலம் கருதாமல் வாழ்ந்து காட்டிய மரத்தமிழன் என்பதையே மரந்தான்.

மனிதா ! நீ மனிதனாக வேண்டுமா ?

மரத்திடம் வா !

ஒவ்வொரு மரமும் உனக்கு போதிமரம்.


வாழ்க்கை:

வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் இனியது; அவன் எப்படிபட்டவனாய் இருந்தாலும் சரியே, வாழ்க்கையில், மேம்பாடு வரும் என்னும் இடையறாத நம்பிக்கை.

வாழ்க்கையில் மேம்பாடு என்பது பொருள் வளம் என்று சிலர் நினைக்கிறார்கள் வாழ்க்கையில் மேம்பாடு என்பது உளநெறி திருப்தி என்று வேறு சிலர் எண்ணுகிறார்கள்; பின்னும் சிலரோ இந்த இரண்டுமே என்று கருதுகிறார்கள்; இவர்கள் தாம் பெரும்பான்மையினர், மனிதர்களை வேருபடுத்துவது இந்தப் பிரச்சனைதான்; அவர்களுடைய செயல்களில் முதன்மை பெறுவது உளநெறித் திருப்தியா ? பொருள் வளமா ?

இதிலிருந்து பின் வரும் கருத்துக் கிளைக்கிறது;

சிலர் வாழ்வதை விரும்புகிறார், வேறு சிலர் வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

"நான் மூச்சு விடுகிறேன், எனவே உலவுகிறேன் என்று ஆகிறது" என்று சிலர் சொல்கிறார்கள்.

மற்றவர்களோ, "நான் மக்களுக்குப் பயன்படுகிறேன், எனவே வாழ்கிறேன்" என்று சொல்கிறார்கள்.

முதல் வகையினர் சுகமாக வாழலாம் என்று நம்புகிறார்கள்இரண்டாம் வகையினரோ, நாம் மக்களுக்கு தேவைப்படுகிறோம் என்னும் உணர்வால் பெருமை சான்ற மகிழ்வு அடையலாம் என்றே தொண்டாற்றி சிறந்து வாழ்கிறார்கள்.

                       - பேராசிரியர் தித்தோவ் - ' சாவுக்கே சவால் எனும் புதினத்திலிருந்து.