வைட்டமின்கள் அரிச்சுவடி

11 .வைட்டமின்கள்  அரிச்சுவடி

11.0 வைட்டமின் அரிச்சுவடி

உடலுக்குத்  தேவையான ஆற்றலையும் ,திசு வளர்ச்சியையும் தருதற்குக் கார்போஹைட்ரேட்,புரதம் ,கொழுப்பு உப்பு ,நீர்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் தேவை . இவற்றை அடிப்படை உணவுப்  பொருட்கள் எனலாம் .ஆனால்  இவை மட்டுமே உடல் வளர்சிக்குப் போதுமான உணவாக இருக்க முடியாது . இந்த உணவுப் பொருட்களை மட்டுமே நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்துகிற மனித உயிர் நோய்வாய்படுவதும்,இறப்பதும் தவிர்க்க முடியாததகும்  .

11 .1 துணை உணவுகள்
   ஆகவே ,நல்ல உடல் நலத்துகும்,வளத்துகும்  இந்த உணவுப்  பொருட்களோடு வேறு  சில துணை உணவுகளும்  தேவை . இவற்றையே வைட்டமின் என அழைக்கிறோம்.சிறு அளவில் இவை உட்கொள்ளப்படும் போது உடலின்  தேவையான வேதியியல் வைத்துக் கொள்வதற்கு இந்த வைட்டமின்களில்  சிறு அளவே போதுமனதாகவும். தேவையானதற்கு மேல் ஈரட்டிப்பு   அளவை உட்கொண்டால் உடல் நலமும் இருபங்கு கூடுமெனச்   சிலர் தவறாக நம்புகிறார்கள் .

11 .2  வைட்டமின் குறைகளும், நோய்களும்
    பெரிபெரி, ஸ்கர்வி   (பல் ஈறு வீக்க நோய் ),மாலைக் குருடு (மாலைக்கண்  நோய்),தோல் வெடிப்பு நோய்  போன்ற பல நோய்களுக்கு வைட்டமின் குறைபாடே  காரணமென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவிலுள்ள  சில
 குறிப்பிட்ட வகை ஊட்டச்சத்துக் குறைவினால் நோய்கள் உண்டாகின்றன  என்பதை நீண்ட நாள்களாகவே மக்கள்
அறிந்திருரிந்தனர்.உதாரணமாக நீண்ட தூரம் கடற்பயணம் செல்லும் போது பழங்களும், பச்சைக் காய்கறிகளும் தேவையான  அளவு கிடைக்காத அபாயகரமான ஸ்கர்வி நோய்களுக்குக் கடலோடிகள் ஆளாகிறார்கள் என்பதை மக்கள் அறிந்திருரிந்தனர்.பச்சைக்  காய்களும் ,பழங்களும்  கிடைக்காதவரை இந்த நோயை நீக்க இயலாது .
  பதினேழு,பதினெட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்கள் இதை உறுதி செய்தனர்.1750ல் வாழ்ந்த ஜேம்ஸ் லின்ட் (james lind ) என்ற ஸ்காட்லாந்து  மருத்துவர் எலுமிச்சம் பழச்சாற்றைக் குடிப்பதன் மூலம் ஒருவர் தன்னை ஸ்கர்வி நோயிலிருந்து  பாதுகாத்துக்   கொள்ள முடியும் என்ற மெய்ப்பித்தார் . பல ஆண்டு வற்புறுத்தலுக்குப் பிறகு , லின்ட் இறுதியாக, 1795 ல் பிரிட்டிஷ்  ராணுவம்  கடலோடிகளுடைய உணவு முறையில் எலுமிச்சம் பழசாற்றையும் சேர்த்துக் கொள்ள செய்தார் . அன்றிலிருந்து  பிரிட்டிஷ் கப்பல்கள் தமது நீண்ட கடல் பயணத்தில் போதுமான அளவு எலுமிச்சம் பழச் சாற்றையும் கொண்டு சென்றன


 
கிறிஸ்டியான் எய்க்மான் (christian Eijkman ) என்ற டச்சு நாட்டுமருத்துவர் தான்  வைட்டமின்களை பற்றி அறைந்தவர்களுள்  முன்னோடியாகக் கருதப் படுகிறார் . தற்போது இந்தோனேசியா என்று அழைக்கப்படும் அன்றைய நெதர்லாண்ட்ஸ் இன்டிஷில் இருந்த பொழுது நரம்பு மண்டலத்தை தாக்கி பல நேரங்களில் சாவுக்கு காரணமாகவிருந்த பெரிபெரி என்ற நோயைப்   பற்றி ஆராய்ந்தார் .


தீட்டிய அரிசியை அதாவது தவிடு நீக்கிய அரிசியைக் கோழிக் குஞ்சுகளுக்கும் ,புறகளுக்கும் கொடுத்ததன் மூலம் பெரிபெரியோடு ஒத்த முடக்கச் செய்யும் நோயொன்று    ஏற்படுவதைக் கண்டு பிடித்து அதனை 1987ல் அறிவித்தார் .பிறகு அதே பறவைகளுக்கு தீட்டபட்படாத அரிசி உணவைக் (தவிட்டு உணவு ) கொடுத்து நோயைக் குணப்படுத்தினார்.


இதன் மூலம் பெரிபெரி நோய் உண்டாவதற்குக் காரணம் உணவிலுள்ள ஊட்டசத்துக்   குறைவுதனே தவிர தொல்லை கொடுக்கும் கிருமிகள்  அல்ல என்ற முடிவுக்கு வந்தார் . இந்த  ஊட்டசத்துக்   குறைவு தயாமின் (thiamine )
அல்லது வைட்டமின் 'பி' என்பதன் குறைபாடே என்பதன் நமக்கு இப்போது தெரிகிறது.

   1906ல் சர் பிரடரிக் கோவ்லாண்ட் ஹோப் கின்ஸ் (Gowland Hopkins ) என்ற    பிரிட்டிஷ் சத்துணவியலார் ஒரு குறிப்பிட்ட வகை உணவை எலிகளுக்குக் கொடுத்துப் பார்த்தபோது பாலில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட சத்துப் பொருளைத் தங்கள் நல வாழ்வுக்காக அவை விரும்புகின்றன  என்பதை எடுத்துக் காட்டினார் .இவ்வகைச் சத்துப் பொருட்கள் அல்லது துணைக்காரணிகள் (accessory factors ) என அழைத்தார் .
11 .3 உணவிலுள்ள சத்துக்கூறுகள் :
     1912
காஸீ மீர்பங் (casimir funk ) என்ற போலந்து வேதியிளார் .அரிசித் தவிட்டிலுள்ள பெரி பெரி எதிர்ப்புச் சக்தியை இனம் கண்டார் . அதை அவர் வைட்டமின் என அழைத்தார் . ஏனென்றால் அது உயிர் வாழத் தேவையான அமோனியா கூட்டுப் பொருள்களை கொண்டிருக்கிறது . வைட்டா  என்ற லத்தின் சொல்லுக்கு உயிர் என்று பொருள் . அன்றிலிருந்து பல துணை சத்துப் பொருள்களுக்கு வைட்டமின் என்ற பெயர் பயன்படுத்தப் பட்டது .பிந்தய  ஆய்வுகளில்  எல்லா   வைட்டமின்களிலும்     இந்த அம்மோனிய கூட்டுச் சேர்க்கை இல்லையெனக் கண்டு பிடிக்கப்பட்டதால்  இறுதியுலுள்ள  'e ' எழுத்தை நீக்கிவிட்டு வைட்டமின் (vitamin ) என்று அழைக்கத் தொடங்கினர்.


11 .4 வைட்டமின் '','பி','சி'
  
பல ஆண்டுகளாக இருவகையான துணை உணவுப் பொருட்கள் மட்டுமே அறியப்பட்டு இருந்தன. கண் நோயைத் தீர்க்கக் கூடியதும் ,கொழுப்பில் கரையக் கூடியதுமான வைட்டமின் '' மற்றொரு வகை .பிறகு ஸ்கர்வி நோயைத் தவிர்க்கக்கூடிய வைட்டமின் 'சி' இதனுடன் சேர்க்கப்பட்டது  .

11 .5 வைட்டமின் 'பி' கலவை
       
வைட்டமின்கள் பற்றிய ஆராய்ச்சி வளர வளர வைட்டமின் 'பி' ஒரு தனிப் பொருளன்று என்பதும் ,அது பல வைட்டமின்களின் தொகுதி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது .எனவே ,இதை 'பி' வைட்டமின்கள் அல்லது 'பி' கலவை ('' complex ) என அழைக்கலாயினர் .இந்த 'பி' கலவையிலிருந்து வைட்டமின்களைத்  தனித்தனியாகப் பிரித்தெடுத்தபோது, பிரித்தெடுக்கப்பட்ட  வைட்டமினுக்கு 'பி 1 ' ,' பி 2  ' என்று தொடங்கி ,'பி 12  ' வரை பெயரிட்டனர் .வைட்டமின்களின் பட்டியல்  வளரத் தொடங்கவே ஆங்கில நெடுங்கணத்திலுள்ள மற்ற எழுத்துக்களும்  அவற்றோடு  சேர்க்கப்பட்டன .காலப் போக்கில்  போக்கில் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட சில வைட்டமின்கள் ஏற்கனவே விளக்கப் பட்டுருந்த சில துணைச் சத்துப் பொருள்களோடு  ஒத்திருப்பதும்   அறியப்பட்டது . வைட்டமின்களாகக்  கருதப்பட்ட இனோசிட்டோல் (Inositol  ) கோலின்  (choline ) போன்றவற்றைக் துணைப் பொருள்கள் என்று கருதுவதை விடவும் உடலைக் கட்டாக  வைத்திருப்பதற்குத் தேவைப்படும்  பொருள்கள் என்று கருதுவதே  பொருத்தமாகும் எனத் தெரியவந்தது . ஏனெனில் இவை மிகப்பெரிய அளவில் நமது உடம்புக்குத் தேவைப்படுகின்றன .


சமீப காலமாக வைட்டமின்களோடு  எழுத்துக்களை சேர்த்துச் சொல்வதைக் காட்டிலும் வேதியியல் பெயரை (Chemical  names ) இடு வழங்கும் போக்கு மேற்கொள்ளப்பட்டு  இருக்கிறது .உதரணமாக ,சத்துணவியாளர் 'பி 1 ' என்பதை 'தயாமின்' (Thiamine ) என்றும் ,'பி 2 ' என்பதை  ரிபோபிலோவின் (Riboflavin ) என்றும் குறிப்பது வழக்கமாகும் .இன்னும் சில
சந்தர்ப்பங்களில்  வைட்டமினுக்கு ,முன்பு வழங்கப்பட எழுத்துக்களை நீக்கி விடுவதும் உண்டு .வைட்டமின்   ஹெச் (H ) என்பதை 'பயோட்டின்' (Biotion  ) என்ற பெயராலும் வைட்டமின் 'எம்'(M ) என்பதை    ஃபோலிக் அமிலம் (Folic Acid ) என்ற பெயராலும்  வழங்குவர் . இது  போல வைட்டமின் பெயர்களில் இன்னும் பல மாற்றங்கள்  இருக்கலாம் .   


நலவாழ்வுக்குத் தினசரி எவ்வளவு வைட்டமின் தேவை என்பதை மக்களுக்கு  அறிவித்தற்காக 'அமரிக்க  தேசிய
அறிவியற் கழகம் ' சிற்பகச் சில பரிந்துரைகளைச் செய்துள்ளது .இதற்குப்    பரிந்துரைகப்பட்ட சமச்சீர்  உணவு அளவு (Recommended Dietary allowances - RDA ) என்று பெயர் .அந்த அளவு மி.கிராமிலும் ,(1 /1000 ) கிராம் மைக்ரோ  கிராமிலும் (1 /1 ,000 ,000 ) சர்வதேச அளவிலும் (1 /40 மைக்ரோகிராம்) கொடுக்கப்பட்டிருக்கும் ,இந்த அளவுகள் உணவுப் பொட்டலங்களிலும் ,வைட்டமின் மாத்திரைப்  புட்டிகளிலும் ( போத்தல்களிலும் ) குறிக்கப்பட்டிருக்கும் .11 .6 உயிர்ச்சத்து ''
          
உயிர்ச்சத்து ''ல் நிறையப்   பிரிவுகளுண்டு, விலங்குத் திசுக்களிலிருந்து கிடைக்கும் 'ரெட்டினால்' (Retinoal ),தாவிரத் திசுக்களிலிருந்து கிடைக்கும் 'கரோட்டின் '(Carotene ) ஆகியவை நன்கு தெரிந்தவை .வைட்டமின் '' இன்  ஒவ்வொரு  மூலக்கூறும் (molecule ) இருபது  கார்பன் அணுக்களையும் ,முப்பது ஹைட்ரஜன் அணுக்களையும் ஒரு ஆக்ஸிஜன்  அனுவையும் (C 20 H 30 O ) கொண்டுருக்கின்றது .இந்தத் துணை உணவுப் பொருள் ஈரலில் சேமித்து  வைக்கப்பட்டிருக்கிறது .  


மனித உயிர்களின் உடல் நலத்துக்கும் வளர்சிக்கும்  வைட்டமின் '' தேவையான ஒன்று .புறத்தோலியர்  செல்கள் சரியாகச் செயல் பட வைட்டமின் '' தேவைப்படுகிறது .வைட்டமின் '' நமது உணவில் குறையுமானால் வீரிய சத்தி குறையும் .மேலும் ,புறத்தோலியத் செல்கள் கடினமாகிக் கீழே விழுந்து  விடும் .இதன் காரணமாக உலர் கண் நோய் (Xerophthalmia ) ஏற்பட்டுக்  குருட்டுத் தன்மைக்கு இட்டுச் செல்லும் .


தோல் நோய்க்கும் இது காரணமாகிறது .மாலைக்கண் நோய்க்கும்  வைட்டமின் '' குறைவு  ஒரு காரணமாகிறது. வைட்டமின் '' வைட்டமின் '','கே' ஆகியவை உடம்பிலுள்ள கொழுப்புச் சத்தில் சேமிக்கப்பட் டிருக்கின்றது ; நீரில் கரையாது; வைட்டமின் 'பி','சி'யைப் போல உடம்பிலிருந்தும் நீக்கப்படாதது.


  மீன் எண்ணெய்,வெண்ணெய்,ஈரல் ,காரட் ,சர்க்கரை வள்ளிக் கிழங்கு ,பூசணிக்காய்,கீரை ,தாக்காளி,வாழைப்பழம் ஆகியவற்றில் வைட்டமின் '' உள்ளது .சாதரணமாக ஒரு மனிதனுக்கு 5000 சர்வதேச அலகு(அளவு ) வைட்டமின் 'தேவை . அதிக அளவில் வைட்டமின் 'பி' உட்கொள்வது  தலைவலி , எரிச்சல் ,குமுட்டல் ஆகியவற்றிற்குக் காரணமாகும் . தலைமுடி  உதிர்தல் ,மூட்டுவலி , மாதவிலக்கு இடையுறு,குழந்தைகளின் மன வளர்ச்சிக் குறைவு ,ஈரல் வீக்கம் ஆகியவையும்  மிதமிஞ்சிய வைட்டமின் '' சத்தினால் ஏற்படும்.


11 .7 'பி'கலவை
   
வைட்டமின் 'பி' அல்லது 'பி' கலவை நீரில்  கரையக் கூடிய பொருளாகும் .இவை பொதுவாக ,சில வினைகளை ஆற்றுகின்றன. தயாமின்(பி1 ), ரிபோ புளோவின் (பி 2 ) , நியாசின் ,பிரிடாக்ஸின் (பி 6 ),பாந்தோனிக் அமிலம் , பயோட்டின்,ஃபோலிக் அமிலம் ;மற்றும் பி 12 ஆகியவை வைட்டமின் 'பி' கலவையில் அடங்கும் .தயாமின் என்பது புளிப்பு மணத்தோடு கூடிய படிகக் கலவை .இந்த வைட்டமின் ஈரலிலும் இதயப் பகுதியிலும் குறைந்த அளவு சிறுநீரகத்திலும் ,மூளையிலும்  சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது .இயல்பான  செரிமானத்துக்கு  தயாமின் தேவைப்படுகிறது  .நரம்புத் திசுக்களின்  இயல்பான வளர்ச்சிக்கும் .செயல்பாட்டிற்கும் இது தேவைப்படுவதோடு பெண்கள் கருகொள்ளுவதற்கும்,முலைப் பால் சுரத்தலுக்கும் தேவைப்படுகிறது .தயாமின் குறைவினால் நரம்பு அமைப்போடு சம்மந்தப் பட்ட பெரிபெரி என்கிற நோய் உண்டாகிறது .பசியின்மை,களைப்பு ,செரிமானக் கோளாறு,எடைக் குறைவு ஆகியவையும் இதனால்  ஏற்படும் .