உணவே மருந்துஅறுசுவைகளின் விளைவுகள்:

அளவாக எடுத்துக் கொண்டால்:

இனிப்பு:

சத்து நிறைந்தது உடலுக்குப் பிடித்தது, உடல் எடையை அதிகரிக்கும், இருமலை குறைத்து இதமளிக்கும்உடல் நச்சுக்களை முறிக்கும், மூளைக்கு டானிக், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

உப்பு:

வியர்வை உண்டாக்கும்அடைபட்ட பாகங்களைத் திறக்கும்ஆரோக்கியமான உடல் எடைக்கு உதவும், பசியைத் தூண்டும். உணவுகு சுவையூட்டும்உமிழ்நீரும், ஜீரணச் சாறுகளும் சுரக்க உதவும்.

கசப்பு:

பசியைத் தூண்டும்; தாகத்தை அடக்கும்பாக்டீரியா இதர விஷப்பொருட்களை எதிர்க்கும்புற்றுநோயைத் தடுக்கும்மயக்கத்தை கட்டுபடுத்தும்கொழுப்பு மஜ்ஜை பல ஜீரங்களை உலர்விக்கும்.

உறைப்பு:

ஜீரண அக்னியைத் தூண்டுகிறதுபசியைத் தூண்டும்தொண்டைக் கோளாறுகளைப் போக்கும்உடல் நாளங்களைத் திறக்கும்கொழுப்பை உலர்விக்கும்.

துவர்ப்பு:

காயங்களை ஆற்றும்மேனி அழகை அதிகரிக்கும், குளிர்ச்சியூட்டும்.

புளிப்பு:

உடல் சூட்டை அதிகரிக்கும்பசியைத் தூண்டும்தாகத்தை அடக்கும்பேதியைக் கட்டுபடுத்தும்ஜீரண சக்தியை அதிகரிக்கும்தொடு உணர்ச்சியை அதிகரிக்கும்உமிழ் நீர் சுரப்பை ஊக்குவிக்கும்.


அளவுக்கு மீறினால்:

இனிப்பு:

கொழுப்பை அதிகரிக்கும்ஜீரண அக்னி, உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும், உடல், பருமனை அதிகரிக்கும்அடிக்கடி சிறுநீர் பிரியும், கழலைக் கட்டி, கொப்புளங்கள், பிரட்டல் உருவாகும்.

உப்பு:

தலை முடி உதிரும்இளநரை உண்டாகும்சரும சுருக்கங்கள் ஏற்படும்தாகத்தை அதிகரிக்கும் சில சரும் நோய்கள் உண்டாகும்கல்லீரனின் செயல்பாடுகளை பாதிக்கும்.

கசப்பு:

உடலின் ஏழு தாதுக்களை பலவீனப் படுத்தும்ஜீரணத்தை பாதிக்கும்எடை குறையும், சருமம் உலர்ந்து போகும்.

உறைப்பு:

விந்து அளவை குறைக்கும். உடல் விரைத்து பலவீனமடையும்மயக்கம், நடுக்கம் உண்டாகும்இடுப்பில் வலி உண்டாகும்ரத்தம், கொழுப்பு, சில தேவையில்லாத திசுக்கள் இவற்றை உலர்விக்கும்.

துவர்ப்பு:

ஜீரண சக்தியை பாதிக்கும்உடல் நாளங்களை அடைக்கும்மலச்சிக்கலை உண்டாக்கும்இதய பாதிப்புகள் ஏற்படும்பொதுவாக பலவீனம் உண்டாகும்.

புளிப்பு:

கல்லீரன் செயல்பாடுகள் பாதிக்கப்படும்சோம்பல் அதிகரிக்கும்பார்வை பாதிக்கப்படும். தலை சுற்றல் உண்டாகும்.  நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்சோகையை உண்டாக்கும்தாகத்தை அதிகரிக்கும்.

உணவே மருந்து:

வளரிளம் பருவப் பெண்ணே, நாம் உண்ணும் உணவே உடலுக்கு தினம், தினம் மருந்துஅந்த் உணவை, சரியான நேரத்தில், சரியான முறையில், சரியான அளவில், சரியான விகிதத்தில், வளரிளம் பருவப் பெண் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அது என்ன ?

 சரியான நேரம்....
சரியான முறை...
சரியான அளவு....
சரியான விகிதம்....?

சரியான நேரம்:

உடலில் பயோ கிளார்க் என்ற இயற்கைக் கடிகாரம் ஒவ்வொரு நாளும் நம்மை இயக்கிக் கொண்டு இருக்கிறதுஅந்த இயற்கை உடல் கடிகாரத்திற்கு நாம் மதிப்பு அளிக்க வேண்டும்.

காலை 8 மணி, மதியம் 1.30 மணி இரவு 8 மணி என்று மூன்று வேளை உணவு உண்ணும் நேரம் என்றால், தினம், தினம் அந்த நேரத்தைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் காலை உணவை  Break Fast என்று அழைக்கிறோம்அதன் பொருள் 10 மணி முதல் 12 மணி நேரம் ஒவ்வொரு மனிதனும் தினம், தினம் உண்ணாவிரதம் இருக்கிறோம்அந்த இரவு உண்ணாவிரத்தைக் காலையில், காலைச் சிற்றுண்டி மூலம் முடித்துக் கொள்கிறோம் என்று பொருள்.

உயரம்...எடை....உணவு....

பொதுவாக ஒருவருடைய உயரத்திற்கேற்ப எடையும் சீராக இருத்திடல் வேண்டும்கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைகளில் கண்டவாறு இருந்திடல் வேண்டும்.

ஒருவருடைய எடையை அறிய ஒரு சூத்திரத்தை பயன்படுத்தியும் கணிக்கலாம்.


                                     உயரம் (அங்குலத்தில்மூச்சை உள்ளிழுத்த நிலையில் மார்பின் அளவு (அங்குலத்தில்)
எடை (பவுண்டில்) = _________________________________________________________________________________________

                                                                                                                17

இதில் 10 பவுண்டுகள் கூடியோ குறைந்தோ இருந்தாலும் சீரான எடையாக எடுத்துக் கொள்ளலாம்எதிர்பார்க்கும் எடையில் அதிக மாற்றம் இருந்தால் எடையைக் குறைக்கவோ கூட்டவோ செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நீரழிவு நோயிற்கு ஆட்படக்கூடியவர்கள், எதிர்பார்க்கும் தனது எடையில் 5லிருந்து 10 சதவீதம் குறைவாக இருந்திடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்பருமனானவர்கள் உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும்எடை குறைவானவர்களும் ஒல்லியானவர்களும் தங்களுடைய எடையை அதிகரிப்பதற்கான வழிவகைகளைத் தேடிக் கொள்ள வேண்டும்.


ஏற்புடைய உணவுகளும் அதற்கான அளவு குறிப்புகளும்:

உணவின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறோமோ அது போலவே எந்த வகையான உணவை எந்த வகையில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதிலும் கவனம் வேண்டும்எடுத்தும் கொள்ளும் உணவின் பகுதி மாவுப் பொருட்கள் 60 சதவீத அளவிலும், புரதம், கொழுப்பு பொருட்கள் முறையே 20 சதவீதம் அளவுகளிலும் இருக்கலாம்.

குறிப்பாக, கொழுப்புப் பொருளினைப் பெரும் அளவில் கூட தவிர்க்கலாம்ஏனெனில் எடுத்துக் கொள்ளும் இதர உணவுப் பொருட்களில் கொழுப்புப் பொருட்களும் ஓரளவிற்கு உள்ளடங்கி இருக்கின்றன.

உடலமைப்பு - உழைப்பிற்கேற்ற உணவு:

சீரான எடையும் உடலுழைப்பும் உள்ள ஒரு வளரிளம் பெண் தன்னுடைய எடை ஒவ்வொரு கிலோவிற்கு 30 கலோரி வீதம் நாளொன்றுக்கு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்அதாவது, இந்த வகையில், 50 கிலோ எடை உடையவர் ஒரு நாளைக்கு 1500 கிலோ சக்தியைத் தரக்கூடிய உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், அந்த 1500 கலோரி மாவுப் பொருளிலிருந்து 900 கலோரியும் (60%), புரதப் பொருளிலிருந்து 300 கலோரியையும், கொழுப்பு போருளிலிருந்து 300 கலோரியும் கிடைக்கும் வண்ணம் உணவினை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சமச்சீர் உணவு - மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்பு சத்து:

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் பொதுவாக,

1 கிராம் மாவுப் பொருட்கள் - 4 கலோரியையும்,
1 கிராம் புரதப் பொருட்கள் - 4 கலோரியையும்,
1 கிராம் கொழுப்புப் பொருட்கள் - 9 கலோரியையும் தரவல்லன.

ஆகவே ஒரு நாளில் 900 கலோரி சக்தியை மாவுப் பொருளிலிருந்து பெற வேண்டும் என்பதற்க்காக, 900 / 4 = 225 கிராம் மாவுப் பொருளை ஒரு வளரிளம் பருவப் பெண் உண்ண வேண்டும்.

300 கலோரி சக்தியை புரதத்திலிருந்து பெற 300 / 4 = 75 கிராம் புரதப் பொருளை ஒரு வளரிளம் பருவப் பெண் உண்ண வேண்டும்.

300 கலோரி சக்தியை கொழுப்பிலிருந்து பெற 300 / 9 = 33 கிராம் கொழுப்பு பொருளையும் ஒவ்வொரு நாளிலும் வளரிளம் பருவம் பெண் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேளாவேளைக்கு சமச்சீர் உணவு:

வளரிளம் பருவப் பெண்ணே, உணவு வகைகளை உன் உடல் எடைக்கு ஏற்ப எடுத்து, பாகுபடுத்தி காலை, மதியம், மாலை மற்றும்  இரவு போன்ற வேளைகளில் பகுத்து அமைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு வகைப் பெண்கள்:

இந்த உலகத்தில், இரண்டு வகை பெண்கள் உள்ளனர், முதல் இரகம், வாழ்வதற்காக உணவு உண்பவர்கள், அதாவது "" EAT to LIVE" என்ற இரகத்தை சேர்ந்தவர்கள்.

இரண்டாவது இரகம், உணவு உண்ணுவதற்க்காக வாழ்பவர்கள், அதாவது "LIVE to EAT" என்ற இரகத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆதி மனிதன், ஆரோக்கிய மனிதன்:

ஆதி மனிதம் காடுகளில் வசித்தான்ஓடி, ஆடி, வேட்டையாடி, மிருகங்களை கொன்று, அதனை உணவாக உண்டான்உடல் உழைப்பு இருந்ததுஉழைப்புகு ஏற்ற உணவை உண்டான்ஆரோக்கியம் காத்தான்.

இயந்திர மனிதன், ஆரோக்கியமற்ற மனிதன்:

250 வருடங்களுக்கு முன்னால், விஞ்ஞான யுகத்தில் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டதுஉடல் உழைப்பு கடந்த 100 ஆண்டுகளில் வெகுவாக குறைந்ததுகால்குலேட்டர் மற்றும் கம்பியூட்டர் கண்டுபிடிக்கப்பட்டதுமன உழைப்பும் கடந்த ஆண்டுகளில் வெகுவாக குறைந்து விட்டது.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் நாம் உண்ணும் உணவின் அளவு அதிகரித்து விட்டது. நாம் உண்ணும் உணவின் தரம் குறைந்து விட்டது.

மனத் தேவைக்கு உணவு:

உடல் உழைப்பு மற்றும் மன உழைப்பு இல்லாத சமுதாயத்தை நாம் உருவாக்கி விட்டோம்அத்தகைய காலகட்டத்தில் உடலுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொள்ளுதல் என்ற நிலை மாறி  மனதிற்க்கு மட்டும் மனத் திருப்திக்கு தேவையான உணவை எடுத்துக் கொண்டதன் விளைவு, உடல் ஆரோக்கிய சீர்கேடு மற்றும் மனச் சோர்வு.

வளரிளம் பருவப் பெண்ணே....நீ உனது  உடல் தேவைக்காக உணவை எடுத்துக்கொள்கிறாயா ? அல்லது மனத் திருப்தி செய்வதற்க்காக உணவை எடுத்துக் கொள்கிறாயா ? சற்று சிந்தி !

உன் நலமான வாழ்க்கை.....உன் கையில்
உன் ஆரோக்கியமான வாழ்க்கை...உன் உணவின் கையில்

உண்டி சுருக்கி:

நம் முன்னோர்கள் உண்டி சுருக்கி, உள்ளொளி பெருக்கி நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர். அதை கிராமப்புறத்தில் பேச்சு மொழியாக "உண்டி  சுருக்குதல் பெண்ணிற்கு அழகு" என்பார்கள்.

உண்டி பெருக்கி....

இன்றைய காலகட்டத்தில், நாம் செய்வது எல்லாம், உண்டி பெருக்கி....உள்ளொளி சுருக்கி...நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்கிறோம்.

மென் உணவு....அமைதியான வாழ்க்கை:

நமது முன்னோர்கள் மென் உணவை, மெதுவாக உண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

SLOW FOOD.........SLOW LIFE..........SLOW DEATH

விரைவான உணவு...விரைவான வாழ்க்கை:

இன்றைய விரைவான வாழ்கையில், நம்மில் பலர், கடின உணவை, வேகமாக உண்டு ஆரோக்கியமற்ற வாழ்க்கை வாழ்கின்றனர்.

FAST FOOD...........FAST LIFE...........FAST DEATH


நீ உணவை உண்ணுகிறாயா ?

உளரிளம் பருவப் பெண்ணே, உணவை நீ அறிந்து உண்டால், அளவு மற்றும் முறை அறிந்து உண்டால், நீ உணவை உண்ணுகிறாய் என்று பொருள்.

உணவு உன்னை உண்ணுகிறதா ?

மாறாக, உணவை நீ அளவு மற்றும் முறை அறியாமால் உண்டால், உணவு உண்ணை உண்ணுகிறது என்று பொருள்.

அதாவது, உன் அளவற்ற உணவு, உனக்கு உடல் ஆரோக்கியத்தி அளிக்காமல், உன்னை நோயற்ற வாழ்க்கை அழைத்து செல்லும் என்பது திண்ணம்.

இதைத்தான் நமது முன்னோர்கள் " அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு " என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அளவு கடந்த உணவு விஷம்

இந்த முதுமொழி முழுக்க, முழுக்க நமது உணவு பழக்கத்திற்கு பொருந்தும்நமது உணவு, நமது தேவையைப் பொறுத்து மட்டும் தான் அமைய வேண்டும்.

அந்த உடல் தேவையைத் தாண்டி எடுத்துக் கொள்ளும் உணவு, விஷத்துக்கு ஒப்பானதுஅது, நமது உடலில் சிறிது சிறிதாக....விஷத்தைதைச் சேர்த்து...உடல் ஆரோக்கிய சீர்கேட்டில் கொண்டு வந்து விட்டு விடும்விளைவு, ஒரு காலகட்டத்தில், மனிதன் நடைபிணமாக நோயுடன் வெற்றி பெற முடியாமல் வந்த நோக்கம் அறியாமல் வாழ்ந்து மடிகிறான்.

உணவு விழிப்பு உணர்ச்சி:

ஒரு சாண் வயிற்றை கட்டாததால் செயற்கரிய செயல்கள் செய்து வாழ்வாங்க்கு வாழ் வேண்டிய பல பெண்கள், இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டனர்.

தேவை இக்கணம், ஒவ்வொரு வளரிளம் பருவப் பெண்ணுக்கும் உணவைப் பற்றிய விழிப்பு உணர்ச்சி.

ஊளைச் சதை:

ஊளைச் சதை (Obesity) என்பது தோலுக்கு அடிப்புறத்திலே, மிக அதிகமான கொழுப்பு சத்தை உடலின் தேவைக்கு அதிகமாக சேகரித்துக் காத்து வைத்திருக்கின்ற தன்மையாகும்ஊளைச் சதை உருவாவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.  ஒன்று உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம்இரண்டு தவறான உணவு பழக்கம். அல்லது தவறான உணவு உட்கொள்ளும் முறை.

வளரிளம் பருவப் பெண்ணே....உண்டி சுருக்கி....
உள்ளொளி பெருக்கி நிம்மதியாக வாழ் !

உண்டி பெருக்கி...உள்ளொளி சுருக்கி....
நிம்மதி இல்லாமல் வாழாதே ! !

வளரிளம் பருவப் பெண்ணே !

உன் நலமான வாழ்க்கை...உன கையில் !
உன் ஆரோக்கிய வாழ்க்கை....
உன் உணவின் கையில் ! !

உணவுப் பாகுபாடு:

உணவினைப் பாகுபடுத்தி எடுத்துக் கொள்ளும் போது, நாளொன்றுக்குத் தேவையான உணவில், காலை உணவு 20%, மதிய உணவு 35%, இரவு உணவு 30%, மாலை சிற்றுண்டி 15% என்கிற அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வேளை சமச்சீர் உணவு:

ஒவ்வொரு வேளை உணவிலும் மாவு, புரதம், கொழுப்பு ஆகிய பொருட்களில் அளவுகள் முறையே 60%, 20%, 20% என்கிற அளவிலும் இருந்திடுமாறு உணவு வகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

உணவு அளவு:

ஒவ்வொருவருடைய எடை, உடலைமைப்பு, உடலுழைப்பு, வயது ஆகிய பொருட்களில் அளவுகள் முறையே 60%, 20%, 20% என்கிற அளவில் இருந்திடுமாறு உணவு வகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

கலோரி அளவு:

ஒவ்வொருவருடைய எடை, உடலமைப்பு, உடலுழைப்பு வயது ஆகியவைகளுக்கேற்ப உணவின் அளவுகளும், அதற்கான கலோரி அளவுகளும் மாறுபடும்ஆகவே அதற்கேற்ப உணவின் அளவுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

உழைப்புக்கு ஏற்ற உணவு:

உதாரணமாக,

1. உடலுழைப்பற்ற டாக்டர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், தொழிலதிபர்கள், போன்றவர்கள் ஒரு கிலோ எடைக்கு 30 கலோரி வீதமும்.

2.  சாதாரண அலுவல் பார்க்கும் எழுத்தர், தொழிலாளி, தட்டெழுத்தர், செவிலியியர், ஆசிரியர் போன்றவர்கள் ஒரு கிலோ எடைக்கும் 40 கலோரி வீதமும்.

3.  கடுமையான உடலுழைப்பை மேற்கொள்ளும் மண் வெட்டுபவர், பளு சுமப்பவர்கள், கைவண்டி இழுப்பவர்கள், சைக்கிள் ரிக் ஷா ஓட்டுவபர்கள் போன்றவர்கள் ஒரு கிலோ எடைக்கு 50 கலோரி அளவிலும்;

நாளொன்றிக்கு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் அடிப்படையில் நாளொன்றிக்கு 1500 கலோரி, 1750 கலோரி, 2000 கலோரி, 2250 கலோரி, 2500 கலோரி போன்ற மாறுபட்ட கலோரிகளுக்கான உணவு தேவைப்படும் போது இணைக்கப்பட்டுள்ள அட்டவணைகளில் கண்டவாறு உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து வேளை உணவுகளில் அமைத்துக் கொள்ளலாம்.

உணவின் அளவில் பொதுவான் அணுகு முறை ஏற்புடையதே:

நாளொன்றிக்குத் தேவையான உணவினை, உணவுப் பொருட்களின் அளவிற்கேற்ப பாகுபடுத்தி குறிப்பிட்ட அளவோடு உண்ணாஅ முடியாதவர்கள் பொதுவான சில அணுகுமுறைகளையாவது கடைப்பிடித்து வந்தால் உடல் நலத்திற்க்கு சிறப்பாக இருக்கும்.

அட்டவணைகள் தரும் விளக்கக் குறிப்புகள்:

பல்வேறு பழங்களுக்கான உணவுப் பகுதி பொருட்கள் மற்றும் கலோரி சக்திக்கான குறிப்புகள் அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அதுபோலவே, உண்ணக்கூடிய தானியங்கள், பருப்பு வகைகள், கிழங்கு வகைகள், எண்ணெய் வகைகள், இறைச்சி வகைகள், இதர உணவு வகைகளுக்கான உணவுப் பகுதிகள், அளவுகள், அவற்றிக்கான கலோரி சக்திகள் ஆகியவைகள் பல்வேறு அட்டவணைகளில் தெளிவாகக்கப் பட்டுள்ளன.

கலோரிக் கட்டுப்பாடு:

ஆகவே, வளரிளம் பருவப் பெண்ணேஉனது எடை, உடலமைப்பு, உடலுழைப்பு போன்றவற்றிக்கான கலோரி சக்தி; அதற்கான உணவு வகைகள் ஆகியவற்றை அட்டவளைகளிலிருந்து துல்லியமாக தேர்ந்தெடுது நாளொன்றுக்கும் ஒவ்வொரு வேளைக்கும் அமைத்துக் கொள்ளலாம்வளரிளம் பருவப் பெண்ணே, குறிப்பிட்ட திட்டமிட்ட உணவினை எடுத்துக் கொள்ள முடியாத சூழ்நிலைகளில் மாற்று உணவு வகைகளிலிருந்து, அதற்கான உணவுப் பகுதி பொருட்கள் கலோரி சக்தி ஆகியவைகளை சீர்தூக்கிப் பார்த்து கூட்டியோ, குறைத்தோ எடுத்துக் கொள்ளலாம்மாற்று உணவிற்கான குறிப்புகளும் அட்டவணைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

உணவுக் கட்டுபாடு:

வளரிளம் பருவப் பெண்ணே, கடுமையான உடலுழைப்பை மேற்கொள்வதாக இருப்பின் அந்த வேளை உணவில் கலோரி அளவு சற்று கூடுதலாகவே இருக்கும் வண்ணமும், இரவு உறக்க நேரத்திலும், ஓய்வு நேரங்களிலும் உணவின் அளவு குறைவாக இருந்திட கவனம் செலுத்திடல் வேண்டும்.

கடுமையான உடலுழைப்பு:

வளரிளம் பருவப் பெண்ணே, கடுமையான உடலுழைப்பை மேற்கொள்பவர்களுக்கு கொழுப்புப் பொருள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே வெப்ப சக்தியாக மாற்றம் பெற்று உடலில் பயன்பட்டு விடுவதால் சர்க்கரை மற்றும் கொழுப்பு தேக்கம் குறைந்து விடும்.

ஆகவே கடுமையான உடலுழைப்பை மேற்கொண்டால் போதிய உணவு எடுத்துக் கொள்வதில் தவறில்லைதான்.

வருமுன் காப்போம் - நீரழிவு நோய்:

வளரிளம் பருவப் பெண்ணே, இன்று இந்தியர்கள், குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், இந்த நீரழிவு நோய்க்கு ஆளாகிறார்கள்இதற்க்கு காரணம், நமது உணவு முறை பழக்கம் மற்றும் மாற்றம்இந்த நீரழிவு நோய் 40 வயது கடந்தவர்களுக்கு வந்த காலம் போய், 30 வயது மற்றும் 20 வயது பெண்களுக்கு வந்து விட்டது.

நீரழிவு நோய் பற்றிய வழிபுணர்வு ஒவ்வொரு வளரிளம் பருவப் பெண்ணுக்கும் தேவைநீரழிவு நோய் தனக்கு உண்டாகியிருப்பதைக் கண்டறியும் போது, சர்க்கரை கலந்த இனிப்புப் பொருட்கள் மற்றும் கொழுப்புப் பொருட்கள் ஆகியவைகளை உணவினில் தவிர்த்து இதர உணவு வகைகளில், இதுநாள் வரை எடுத்து வந்த உணவின் அளவில் அரை அல்லது மூன்றில் இரண்டு பங்கு அளவு வரையிலேயே கலோரி சக்தியைத் தரவல்ல உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, காலைச் சிற்றுண்டி 6 இட்லி வீதம் சாப்பிட்டு வந்தவர்கள் இனி 3 அல்லது 4 இட்லி அளவி எடுத்துக் கொண்டாலே போதுமானதுஅது போலவே மதிய உணவாக ஒரு பிளேட் அளவு சாப்பிட்டு வந்தவர்கள் 1/2 அல்லது 3/4 பிளேட் அளவு சாதம் சாப்பிட்டாலே போதுமானது.

அதிகமாக உண்டு பழக்கப்பட்டவருக்கு, குறைந்த அளவு உணவினைச் சாப்பிடும்போது பசி எடுக்குமாதலால், உணவின் அளவை ஈடு செய்து பசியைத் போக்குவதற்காக காய், கனி கீரை வகைகளைச் சற்றுத் தாராளமாகவே எடுத்துக் கொள்ளலாம்ஏனெனில் காய், கனி, கீரை வகைகளில் கலோரி சக்தியை கொடுக்கவல்ல உணவுப் பொருட்கள் அதிக அளவில் இல்லாததே ஆகும்.


வருமுன் காப்போம் - கொலஸ்ட்ரால்:

கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு பொருள் நீரழிவு நோயாளிகளுக்கு மேலும் இரத்த நாள உட்சுவர்களில் படிந்து, கெடுதலை உண்டு பண்ணி தடையை ஏற்படுத்துமாதலால் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுப் பொருட்களைத் தவிர்த்திடல் வேண்டும்.
உணவினை வேளை தவறாமல் உண்ண வேண்டு, இடைப்பட்ட வேளைகளில் பசி இருப்பின், கலோரியைத் தராத அல்லது மிகக் குறைந்த கலோரியைத் தரத்தக்க உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.

கூட்டுக் கலவை உணவு:

குறிப்பாக மோர், தக்காளிப் பழச்சாறு, எலுமிச்சி பழச்சாறு, தர்பூசணிப் பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்நாம் உண்ணக் கூடிய உணவுவகைகள் அனைத்துமே பெரும்பாலும் கூட்டுக் கலவையாகும்அந்தக் கூட்டுக்கலவையில் எந்த உணவுப் பொருள் பெருமளவில் உள்ளது என்பது பற்றியும் இதர உணவு பொருட்கள் பற்றியும் சீர்தூக்கிப் பார்த்து உணவு அளவுகளையும் அதற்கான கலோரி அளவுகளையும் தோராயமாக கணிக்கலாம்.

உணவுப் பொருட்களைச் சமைப்பதின் காரணமாக வேகவைக்கும் போது கலோரி சக்தியை கொடுக்கவல்ல பொருட்களிலிருந்து குறிப்பிடப்படும் அளவில் இழப்பு இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட உணவை மட்டும் உண்ண வேண்டும் என்று தினிப்பது நடைமுறையில் முடியாததாகிவிடும்மாற்று உணவு வகைகளை சில கட்டுப்பாட்டுடன் உண்ணலாம்அது ஏற்புடையதே !

ஆகவே பல்வேறு அட்டவணைகளில் குறிப்பிட்டுள்ள உணவு வகைகள், அதற்கான கலோரி, உணவுப் பொருள் கலோரி போன்றவற்றை சீர்தூக்கிப் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்அவற்றிக்கான மாற்று உணவு வகைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்அப்படிப்பட்ட ஞானமானது தேவைக்கு ஏற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வழிவகுக்கும்.

இதுவரை கூறப்பட்டுள்ள கருத்துக்கள், உரிய ஆலோசனை குறிப்புகள், உடல் நலத்திற்கான வழி வகைகள், கட்டுப்பாடுகள், சிகிச்சை முறைகள் போன்றவைகளெல்லாம வாழ்நாளெல்லாம் ஏற்று கடைபிடிக்க வேண்டிய வகைகளாகும்அதன் அடிப்படையில் சமுதாய நல்வாழ்விற்கான வழி வகைகளை அமைத்துக் கொள்வோமாக !

நோய் வராமல் தடுக்கும் முறைகள்:

1. நாள் தோறும் குளித்து உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2. தலைக் குளித்து, தலைக்கு எண்ணெய் தடவி, பேன் எடுத்து பொடுகு இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
3. கை மற்றும் நகங்களை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
4. கண்ட இடங்களில் மலம் கழிக்கக் கூடாதுஅதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மலம் கழிக்க வேண்டும்.
5. மலம் கழித்த பின் கைகளைச் சுத்தமாக கழுவ வேண்டும்.
6. உணவு உண்பதற்க்கு முன்பும், பின்பும் கைகளைச் சுத்தமாக கழுவ வேண்டும்.
7. மூக்கு நோண்டுவது, காது குடைவது போன்ற சுகாதாரமற்ற பழக்க வழக்கங்களைக் கைவிட்டு விட வேண்டும்.
8. தும்மும் போதும், இருமும் போதும் வாயைத் துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.
9. சுற்றுப்புறத்தை தூய்மையாக பேண வேண்டும்.
10.  சரியான நேரத்தில், சரியான உணவை, சரியான சத்து விகிதம் அறிந்து உண்ணவும்.
11.  காய், கனிகள் மற்றும் கீரைகளை தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
12.  மொய்த்த, தெரு ஓரங்களில் விற்கும் பொருட்களை உண்ணாமல் இருக்க வேண்டும்.
13.  நொறுக்குத் தீனி மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்கவும்.
14.  சத்துணவு மற்றும் சமச்சீர் உணவு உட்கொண்டு நோய் தடுப்பாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
15.  தடுப்பு ஊசிகளை வரையறுக்கப்பட்ட காலத்திற்க்குள் போட்டுக் கொள்ள வேண்டும்.
16.  நோயின் அறிகுறி கண்ட உடனே நோய் வாய்பட்டவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.